நவீன இலக்கியத்தின் பெரும் பயன்

BHARATHIசமூக நாகரீகத்தின் கண்ணாடியாக விளங்கக்கூடியவை இலக்கியங்கள். நமது நாட்டின் நாகரீகம் எத்தனைத் தொன்மையானது என்பதை மட்டுமல்லாது அது எத்தகைய உயர்ந்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் உலகிற்கு உணர்த்திக் கொண்டிருப்பதே நமது இலக்கியங்கள்தாம்.

செய்திகள் வரலாறுகளாய் உருமாறுவதுபோல், எழுத்துக்கள் அதன் தரம் கருதி இலக்கியங்களாய் உயர்வு பெருகின்றன. தமிழின் நவீன இலக்கியம் மகாகவி பாரதியில் இருந்து தொடங்குகிறது.

சங்க இலக்கியங்களிலும், இடைக்கால பக்தி இலக்கியங்களிலும் காவியங்கள், கதைகள் என அனைத்தும்  கவிதை நடையிலேயே எழுதப்பட்டு வந்ததன. மொழி அறிவு மட்டுமல்லாது, புலமையும் கொண்டவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியதாய் அவை வார்க்கப்பட்டன. இதன் காரணமாகவே, அந்த இலக்கியங்கள் உரைநடை மூலம் அனைவருக்கும் புரியும்படி விளக்க வேண்டிய தேவை எழுந்தது.

இந்த போக்கு பாரதியில் இருந்து மாறியது. அவர்தான், கவிதைகளை எளிய மொழி கொண்டு இயற்றத் தொடங்கினார். அவரிடம் இருந்து பிறந்த நவீன கவிதை புதுக்கவிதையாகவும், ஹைக்கூ வடிவிலும் மாற்றம் கண்டது. அதோடு, கவிதை மூலமாக மட்டுமின்றி, உரைநடை வாயிலாகவும் இலக்கியங்கள் உருவெடுக்கத் தொடங்கின. இலக்கியங்களுக்காக மட்டுமின்றி, பல்துறை அறிவைப் பெருக்கும் பெரும் ஆயுதமாகவும் மொழி முழு வீச்சுடன் பயணப்படத் தொடங்கியது.

உரைநடையின் பயனை இன்று ஒவ்வொருவருமே அனுபவித்து வருகிறோம். இந்த பயன் தொடர, நவீன இலக்கியம் தனது எல்லைகளை மேலும் விரிவுபடுத்த வாய்ப்புகள் பெருகி உள்ளன. நவீன இலக்கியத்தின் வளர்ச்சியில் பங்கு பெருபவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமல்ல; வாசகர்களும் என்பதை நினைவில் கொண்டு இந்த பயணத்தைத் தொடருவோம்.

Balamohandas

-பால. மோகன்தாஸ்
(Visited 873 times, 4 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...