போர்க்களத்தில் இருந்தாலும் பெண் பெண்தான்

Wrapper தமிழக மக்களின் நெஞ்சத்திற்கு நெருக்கமானதும்,உருக்கமானதுமாக இருப்பவை இலங்கைத் தமிழர்கள் பற்றிய புத்தகங்கள். இங்கே இதற்கான வாசகர்கள் அதிகம் என்பதால் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகம். வீர ஆவேசங்களையும் , பிரசாரங்களையும் தவிர்த்து  விவரம் தேடுவோருக்கு சில புத்தகங்கள் மிக முக்கியமானவை.

  1. இலங்கைப் பிரச்சினை – தீர்வு என்ன ? / கே.எஸ். கோவிந்தன் /அகில பாரதீய வித்யார்த்தீ பரிஷத்.
  2. விடுதலைப் புலிகள் / மருதன் / கிழக்கு பதிப்பகம்
  3. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் / புஸ்பராஜா / அடையாளம்.
  4. இலங்கை இறுதி யுத்தம் / நிதின் கோகலே / கிழக்கு பதிப்பகம்
  5. ஈழம் : இன்றமெக்கு வேண்டியது சமாதானமே / ஷோபா சக்தி , அ. மார்க்ஸ் / பயணி வெளியீட்டகம் .
  6. தமிழீழப் புரட்டு / எம். ஆர். ஸ்ராலின் / எக்ஸின் வெளியீடு

இவை ஈழப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள உதவும். அவசியமான புத்தகங்கள். இந்தப் பட்டியலில் ராஜீவ் படுகொலை பற்றிய புத்தகங்களும் , போருக்குப் பிந்தைய புத்தகங்களும் சேர்க்கப்படவில்லை. இந்தக் கருத்துக் களேபரங்களுக்கிடையே விவரங்களையும் விருப்பங்களையும் பிரித்து அறிவது சிரமம்தான். இருப்பினும் அதைச் செய்தாக வேண்டும். அதற்கு , “ஒரு கூர்வாளின் நிழலில்” என்ற   தமிழினியின் புத்தகம் உதவுகிறது. இதில் சொல்லப்படுகிற பல விஷயங்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. உங்களுக்காக சில : ப. 36“… இருபதாம் நூற்றாண்டில் உலகம் உச்ச நவீனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது, புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்கள் கட்டை வண்டிக் காலத்திற்குப் பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் நாங்கள் எப்படியாவது எமது தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பி விடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது. அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது. “ ப. 34.  “……வன்னிப் போர்க்களத்தில் கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும் .” போர்க்களத்தின் நிர்பந்தத்தால் கடுமையாக உரமேற்றப்பட்டு விட்டாலும் , தமிழினிக்கு உள்ளிருக்கும் பெண்மை அங்கங்கே தலை காட்டுகிறது. தன்னுடைய ஊரைப் பற்றி அவர் எழுதுகிறார் . போர்க்களத்தில் இருந்தாலும் பெண் பெண்தான். ப. 55. “ அகன்று விரிந்த வயல்வெளிகளும் , அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும் , கிராவல் மண் பாதைகளும் , பூவரசு வேலிகளும் , நான் பிறந்த ஊரான பரந்தனின் எழில் கொஞ்சும் அழகின் கோலம் ..” ஜனநாயகப்படுத்தப்படாத அமைப்பு புலிகளுடையது. என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், அங்கே வாரிசு ஆதிக்கம் இருந்தது என்பது ஒரு புதுத் தகவல் ப.170. .”… சாள்ஸ் அன்ரனி எடுக்கும் அதிரடியான முடிவுகளால் அவரைக் குழந்தைப் பருவத்திலிருந்து தூக்கி வளர்த்த இயக்கத்தின் மூத்த தளபதிகள் கூட மனக் கசப்பையடைந்த சம்பவங்கள் அறியக் கூடியதாக இருந்தன. தாக்குதல் தளபதிக்கான கூட்டங்களில் அனுபவம் மிக்க தளபதிகளின் முன்பாகத் தம்பி சாள்ஸ் அவர்களை அவமானப் படுத்தும் வகையில் கருத்துக்களை முன் வைப்பதாகவும், அதைப் பார்த்துக் கொண்டிருக்கவே சங்கடமாக இருப்பதாகவும் தளபதி விதுஷா பல தடவைகள் என்னிடம் கூறியிருக்கிறார்.” புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை அறிய விரும்புவோருக்கான ஆவணம் இப்புத்தகம் . ஒரு கூர்வாளின் நிழலில் / தமிழினி / காலச்சுவடு பதிப்பகம் / பிப்ரவரி 2016/ பக்கங்கள் 256 / ரூ 225/- Contact: subbupara@yahoo.co.in

SUBBU JI– சுப்பு
(Visited 425 times, 1 visits today)
Marquee Powered By Know How Media.
Loading...